சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” படத்தை பாராட்டிய நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.
அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார்.
இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தை விஜய்க்குகாட்டியிருக்கிறார்

இயக்குநர் நெல்சன்.விஜய்க்கு அந்தப்படம்பிடித்திருந்ததாம்.
இயக்குநர் நெல்சனைப் பாராட்டியிருக்கிறார்.அவரை நேரில் பாராட்டியதோடு நில்லாமல் தனக்கு நெருக்கமானவர்களிடமும் டாக்டர் படம் நல்லா வந்திருக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.
இத்தகவலை ஒருசிலர் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்கிறார்கள்.
இந்தத் தகவலை அறிந்த சிவகார்த்திகேயனும் மகிழ்ச்சியில் திளைக்கிறார் என்கிறார்கள்.