ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க விஜய் திட்டம்?

தனது மாஸ்டர் படம் வெளியாகும் அன்று, திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் படம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த 2020 துவக்கம் முதலே, உலகம் முழுதும் கொரோனா பரவி அச்சமூட்டி வருகிறது.  இதனால் உலகம் முழுதும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.  கடந்த டிசம்பர் வரை, 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தவிர லண்டனில் உருவான புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு தமிழகமும் தப்பவில்லை.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் முயற்சிகள் உலகெங்கிலும் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசி சோதனையின்போது கொரோனா தடுப்பூசி சோதனையின்போது தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்ததாக, கடந்த 2020 அக்டோபர் மாதம்,  பிரேசில் அரசு தெரிவித்தது.

தற்போது, அமெரிக்க நிறுவனமான பைசர் – பயோ என் டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பாதுகாப்பானது எனக் கூறி உலக சுகாதார மையமே அவசர கால ஒப்புதல் வழங்கி உள்ளது

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் இத்தடுப்பூசியை போட்டுக் கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற செவிலியர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2020 பிப்பரவரி – மார்ச் மாதங்களில் உலகின் பல நாடுகள், கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கை அறிவித்தன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தமிழ்நாடு மாநிலத்தைப் பொறுத்தவரை, கடந்த 2020 மார்ச் 24’ல்அரசாங்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் விளைவாகவே உலக அரங்கில் இந்திய கொரோனோ பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருந்த பொழுதும். தமிழகம் முதல் 3 இடங்களில் இருந்த போதிலும் தற்பொழுது அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை சீராகும் அளவிற்கு சென்றது.

இந்த ஊடரங்குக்கு திரையரங்குகளும் தப்பவில்லை. மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பிறகு ஐம்பது சத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  தற்போது தமிழக அரசு, நூறு சத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இது பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள், “கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஊரடங்கை அமல்படுத்திய அரசு, அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே தளர்வுகளை அளித்தது. ( டாஸ்மாக் மதுக்கடைகள் தவிர.)மத்திய அரசும் இன்றும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கவில்லை.மாநில அரசும் பள்ளிகளை திறக்கவில்லை.
இந்நிலையில் திரையரங்குகளை திறந்தது… தற்போது நூறு சத பார்வையாளர்களை அனுமதிப்பது சரியான நடவடிக்கையா? பூட்டப்பட்ட திரையரங்கில் ஏ.சி.யில் தொற்று பரவ வாய்ப்பு இருக்குமே!” என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், “ஒரு திரையரங்கில் ஐநூறு முதல் ஆயிரம் வரை பார்வையாளர்கள் பார்க்க வசதி இருக்கும். சிறப்புக் காட்சி என்றால் ஐந்து காட்சியும், இல்லாவிட்டால் நான்கு காட்சியும் நடக்கும். அப்போது அனைவருக்கும் சானிடைசர் வழங்க இயலுமா, அனைவரும் மாஸ்குடன் வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா..” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதோடு குறிப்பாக நடிகர் விஜய்யை குறிவைத்து விமர்சனங்கள் எழுகின்றன.அதாவது, “விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் 13ம் தேதி வெளியாகிறது. இதற்காகவே 100 சத பார்வையாளர்களை திரையரங்கில் அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது. காரணம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் சந்தித்ததாக தகவல் வெளியானது” என்று கூறுகின்றனர்.

இந்த விமர்சனத்தைத் தவிர்க்க, மாஸ்டர் படம் வெளியாகும், 13ம் தேதி, சென்னையில் திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் படம் பார்க்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அன்று திரையிடப்படும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளிலும் வெவ்வேறு திரையரங்குகளில் ரசிகர்களுடன் விஜய் படம் பார்க்க உள்ளார் என்றும், திரையரங்குகளின் விவரம் விரைவில், விஜய் மற்றும் தயாரப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைவதோடு, மக்களுக்கும் கொரோனா குறித்த அச்சம் குறையும் என விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.