விஐய் நடித்து வெளிவரும்படரிலீஸ் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே பரபரப்பாகப் பேசப்படாமல், ரசிகர்களின் செயல் அல்லது விஜய்யின் எண்ணத்தின் மூலம் அவ்வப்போது செய்திகளில் இடம்பெறுவது விஜய்யின் வழக்கமாக இருந்தது.

ரசிகர் மன்றத்தின் சார்பில் மாநாடுகள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என விஜய்யின் மைலேஜ் தமிழகத்தில் அதிகரித்து வந்த காலத்தில், அவரது சினிமாக்கள் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கின.
அதன்பின் ரசிகர் மன்ற பணிகளைக் குறைத்துக்கொண்ட விஜய், மிக நீண்ட காலத்துக்குப் பிறகு அவர்களது அன்பினால் அரவைணைக்கப்பட்டிருக்கிறார்.
தினமும் ஆயிரக்கணக்கில் மாஸ்டர் ஷூட்டிங் நடைபெறும் நெய்வேலிக்குச் சென்று காத்திருந்த ரசிகர்களுக்கு காரில் வந்தும், வேன், பஸ் மீது ஏறியும் கையசைத்துச் சென்றார் விஜய்.

கட்டுப்படுத்த முடியாத இந்த அன்பைத் தனது ஸ்மார்ட்போனில் செல்ஃபியாக பதிவு செய்து ட்விட்டரில் போஸ்ட் செய்ததுடன் இன்னொரு வேலையையும் பார்த்திருக்கிறார் விஜய். அது, பட யூனிட்டில் இருந்த கேமராக்கள் அனைத்தையும் பயன்படுத்தி பஸ் மீது ஏறி ரசிகர்களுக்கு நன்றி சொல்வதையும், கையசைப்பதையும் படம்பிடிக்கச் சொன்னதுதான்.
திரைப்படத்தில் இடம்பெறும் புரட்சிகரமான பாடல் ஒன்றுக்கு வேறு எந்த காட்சிகளும் இல்லாமல், இந்த ரசிகர்களின் கூட்டத்தையும் என்னையும் வைத்துவிடுங்கள் என்று கூறியதுடன் சினிமாவுக்குப் பயன்படுத்தும் கேமராக்களையே பயன்படுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘தலைவன் கோட்டையிலே’ என்ற பாடலில் காட்சிகள் இடம்பெறும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here