கமல் வழியில் காந்தி டாக்கீஸ் படத்தில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் மாதம் ஒரு படம் வெளியிடக்கூடிய வகையில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் கொள்கையை கொண்டவர்
இவர் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிப்பதில்லை வில்லனா, காமெடியனா, சில காட்சிகள் வந்து போகும் கௌரவ தோற்றமா? வலைதள தொடரா?நடிக்க மறுப்பதில்லை
இவரது தேவை நல்ல கதை, கதாபாத்திரமாக இருக்க வேண்டும் கேட்கின்ற சம்பளம் கொடுக்க வேண்டும் இது தான் விஜய்சேதுபதியின் அடிப்படைக் கொள்கை
 தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அது ஒரு இந்தி படம். அதிலும் மெளனப் படம் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம் ஏற்கனவே இது போன்று கமலஹாசன் பேசும்படம் என்கிற மெளனபடத்தில் நடித்து இருக்கிறார் அவரை தொடர்ந்து படம் முழுவதும் பேசாமல் நடிக்கும் நடிகராக விஜய்சேதுபதி இருக்கப்போகிறார்
‘காந்தி டாக்கீஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவ து தற்போது இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் வசனங்களே கிடையாது.

அது ஒரு மெளனப் படம்.

நான் தற்போது முன்பைவிட நன்றாகவே இந்தி பேசுகிறேன். இயக்குநர்கள் ராஜ் – டிகே இயக்கும் வெப் சீரிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைகார்’ படங்களுக்காக நான் இந்தி சரளமாக பேச கற்று வருகிறேன்.

ஒரு நடிகரின் வார்த்தையைவிட அவரது மவுனமே நிறைய பேச வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அதுவே உண்மை. உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமே வார்த்தைகளை உணர முடியும். நான் பேசாமல் இருக்கும்போதுதான் என்னுடைய உணர்வுகள் வெளிப்படுகின்றனஎன தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.