விஐய்சேதுபதி கதையில் விஷ்ணு விஷால்

சுஜாதா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிக்கும் புதிய படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி கதை எழுதுகிறார்.

சஞ்சீவ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். VV18 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த திரைப் படத்திற்கான கதையை விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது படத்தின் சிறப்பம்சமாகும்.

2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்த திரைப்படத்தின் கதையை படத்தின் இயக்குநரான பிஜு விஸ்வநாத்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் எழுதியிருந்தார்.

மேலும், பிஜு விஸ்வநாத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து ‘சென்னை பழநி மார்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்திற்கான கதையை எழுதியுள்ளனர்.

ரோட் மூவி, அட்வெஞ்சர், பிளாக் காமெடி என மூன்று விதமான ஜானர்களில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் VV18 திரைப்படத்தின் தகவல்களை குறிப்பிட்டு “எனது உயிர் நண்பன் உடன் இணைந்து நான் நடிக்கும் திரைப்படத்தின் தகவல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.