நேற்று மாலை 4 மணிக்கு (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அந்த சங்கத்தின் அலுவலகத்தில்செய்தியாளர்கள்
சந்திப்பு நடைபெற்றது
சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும்.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து வருவதால், அங்கு வேறு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா அரசுகளைப் போல திரையரங்குகளுக்கு வட்டியில்லாக் கடன் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்கவேண்டும்.
Related Posts
ரூ.10 கோடிக்குள் தயாரிக்கப்படும் படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியின் மாநிலப் பங்கை விட்டுக்கொடுக்கவேண்டும்
உள்ளாட்சிவரியை இரத்து செய்யவேண்டும்
என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது
அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது,
திரையரங்குகளைத் தவிக்க விட்டு நேரடியாக இணையதளங்களில் படத்தை வெளியிட்ட சூர்யா குடும்பம் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் படங்களை எதிர்வரும் காலங்களில் திரையரங்குகளில் திரையிடமாட்டோம். திரையரங்குகள் இருப்பதால்தான் OTTநிறுவனங்கள் அவர்கள் படங்களைப் பல கோடி கொடுத்து வாங்குகின்றன.
நாங்கள் இல்லையென்றால் அங்கு அவர்களுக்கு மதிப்பு இல்லை. இது புரியாமல் திரையரங்குகளை அழிக்கும் நோக்கத்தோடு நடந்து கொள்ளும் சூர்யா குடும்பத்துக்குத் தகுந்த பாடம் கற்பிப்போம் என்றார் ரோகிணி R. பன்னீர்செல்வம்.