உதயநிதி – வடிவேலு சந்திப்பு பின்ணனி என்ன?

கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படம், தனுஷின் பெயரிடாதப்படாதபடம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்த பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான்இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் உதயநிதி நடித்து வருகிறார். அரசியல் களத்தில் தீவிரமாக இருப்பதால் நடிப்பதற்கு தற்காலிகமாக விடுமுறை விட்டுள்ளார்

மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பதில் இருந்து ஒதுங்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதுஉதயநிதிக்காக பா.இரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது விரைவில் இது குறித்து அறிவிப்பு வரலாம்.

எல்லாப் பிரச்சினைகளையும் முடித்து மீண்டும் நடிக்க தயாரான வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு அறிவிக்கப்பட்டது அந்த தலைப்பில் ஏற்கனவே படம் தயாராகியுள்ளதால் வேறு தலைப்பு யோசிக்கப்பட்டு வருகிறது
திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்ததால் வடிவேலுவின் திரையுலக வாழ்விற்கு அதிமுகவால் முட்டுக்கட்டை போடப்பட்டதாக கூறப்பட்டு வந்தது அதனால் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்க இயக்குநர் மாரிசெல்வராஜ்-உதயநிதி ஸ்டாலின் இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது அதனால் தான் உதயநிதியை நேற்று நடிகர் வடிவேலு சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றிகூறும் சந்திப்புதான் இது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்