தமிழ் சினிமாவின் மசாலா பட இயக்குநர்களில் முக்கியமானவர் ஹரி தமிழ்,சாமி,சிங்கம்’ படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் ஹரி, இப்போது தனது மனைவியின் சகோதரரும், விஜயக்குமாரின் மகனுமான அருண் விஜய்யுடன் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘சிங்கம் 3’க்கு பிறகு சூர்யாவும், ஹரியும் ‘அருவா’ படத்தின் மூலமாக இணைய உள்ளதாக கொரானா ஊரடங்குக்கு முன்பாக தகவல்கள் வெளியாயின. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போனது.
இதனால் சூர்யாவுக்காக எழுதிய ‘அருவா’ படத்தின் ஸ்க்ரிப்ட்டில்தான் அருண் விஜய் இப்போது நடிக்க இருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவருகிறது. இதுகுறித்து ஹரிக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.அருண் விஜய்
“அருண்விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஸ்க்ரிப்ட்டுக்கும் ‘அருவா’ படத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஹரி இயக்கத்தில் சூர்யாவின் ‘அருவா’ படம் நிச்சயம் ஒருநாள் நடக்கும். இது வேறு மாதிரியான கதை, வேறு களம். காமெடி ப்ளஸ் ஆக்ஷன் சென்ட்டிமென்ட் கலந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். கோலிவுட் மார்க்கெட் தாண்டி தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்வகையில் படத்தை இயக்கயிருக்கிறார் ஹரி. இதற்கேற்றபடிதான் ஸ்கிரிப்ட் வேலைகள்நடந்துகொண்டிருக்கிறது.