கோப்ரா படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஏன்?

விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா.மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.கோப்ரா படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.இது விக்ரமின் 58 ஆவது படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் , விக்ரமின் 59 ஆவது படம் என்கிறார்கள்.
இவ்விரண்டு படங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம் விக்ரம் 60.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம் விக்ரமின் 60 ஆவது படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் கோப்ரா மற்றும் விக்ரம் 60 ஆகிய இருபடங்களையும் லலித்குமார் தயாரித்து வருகிறார்.கோப்ரா படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ்இயக்கும்படத்தின்படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது.
இவற்றில் கோப்ரா படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் லலித்குமார் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முதலில் வெளியிட முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, 58 ஆவது படத்துக்கு முன்பாக 60 ஆவது படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது