வட சென்னையின் அடையாளம் அகஸ்தியா மூடப்பட்டது ஏன்?

சென்னையில் ஐம்பது ஆண்டுகளை கடந்ததியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் அபிராமி மெகாமால், தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், மகாலட்சுமி,ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நிரந்தரமாக மூடப்படுவதை அதிகாரபூர்வமாகஅறிவித்துள்ளனர்வட சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 53 ஆண்டுக்கால பழமை வாய்ந்தது.1004 இருக்கைகளை கொண்ட பிரமாண்ட தியேட்டர். முதல் திரைப்படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , காவல்காரன், சிவாஜியின் சிவந்த மண், சொர்க்கம் உள்ளிட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது.
ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி, ப்ரியா, படிக்காதவன், கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் படங்களும், சூர்யாவின் காக்க காக்க படமும் வெள்ளி விழா கண்டன. திரைப்படம் தொடர்பான காட்சிகள் இந்த தியேட்டரில் தான் அதிகமாக படமாக்கப்படும் காரணம் அந்த அளவிற்கு விசாலமானதாக இருந்தது. வடசென்னையின் அடையாளமாக இருந்து வந்த இந்த திரையரங்கம்குளிர்சாதனவசதி இல்லாத தியேட்டர்களில் சிறந்த தியேட்டராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக படங்களை திரையிடுவதன் மூலம் தேவையானவருமானம் எதுவும் இல்லாததாலும், கொரோனா பிரச்சினையால் தற்போது தியேட்டர்கள் திறக்கும் சாத்தியம் இல்லை என்பதாலும், மக்கள் இப்போது ஏ.சி வசதி இல்லாத தியேட்டரை விரும்புவதில்லை என்பதாலும் அகஸ்தியா தியேட்டரை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்

வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த அகஸ்தியா நிரந்தரமாக மூடப்படுவதற்கு இதுதான் காரணமா என தியேட்டர் வட்டாரத்தில்விசாரித்தபோது

தமிழகம் முழுவதும் பழமையான திரையரங்குகள் தங்களைநவீனபடுத்திக்கொண்டுவிட்டன இதன் காரணமாக புதிய திரைப்படங்களை திரையிடுவதில் அத்திரையரங்குகளுக்கு முன் உரிமைவழங்கப்படுகிறதுசென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற தேவி திரையரங்கு நிர்வாகத்தின் கீழ் உள்ள அகஸ்தியா இடவசதி, பெரிய விசாலமான அரங்கமாக இருந்தபோதிலும் நவீனப்படுத்த அதன் உரிமையாளர்கள் முயற்சிக்கவில்லைமெட்ரோ ரயில்பாதைக்காக இத்திரையரங்கு உள்ள பகுதியில் குறிப்பிட்ட அளவு இடத்தை அரசு கையகப்படுத்தியது இத்தியேட்டர் ஏரியாவில் உள்ள ஐடீரீம்தியேட்டர்நவீனபடுத்தப்பட்டதால் புதிய திரைப்படங்களை அங்கு திரையிட தயாரிப்பாளர்கள் முன் உரிமை கொடுத்தனர் இதனால் அகஸ்தியாவுக்கு புதிய படங்கள்திரையிடகிடைக்கவில்லைதியேட்டரை நவீனப்படுத்தி நடத்த பலரும் முயற்சித்த போது அதனை நிர்வாக தரப்பு ஏற்கவில்லை ஓடுகிறவரை ஓடட்டும் முடியாதபோது மூடி விடலாம் என்கிற மனோநிலையில் இருந்த தியேட்டர் நிர்வாகம் கொரானா வைரஸ் காரணமாக 150 நாட்களை கடந்து தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் திரைஅரங்குகள் திறப்பதற்கான சாதகமான நிலையில் அகஸ்தியா நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்