இயக்குனர் லிங்குசாமிகனவு நிறைவேறுமா?

0
44

ஆனந்தம் படத்தின் மூலம் 2001ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான லிங்குச்சாமிக்கு முதல் படமே 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது மாதவன் நடித்த ரன், அஜீத்குமார் நடித்த ஜீ, விஷால் நடிப்பில் சண்டைக்கோழி,விக்ரம் நடித்த பீமா என தொடர்ச்சியாக தமிழில் வியாபார முக்கியத்துவமுள்ள படங்களை இயக்கினார் அதேவேளை 11 படங்களை சொந்தமாக தயாரிக்கவும் செய்தார் ஆனந்தம்

ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி,அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின இதனால் தமிழில் முன்னணி ஹீரோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இவரது இயக்கத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் தயக்கம் காட்டி வந்தனஇந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்றுஉள்ளார் லிங்குசாமி.அடிதடி ஆக்சன் – மசாலாபடமாக தயாரிக்கப்பட உள்ள இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு இணையாக திரைக்கதைஉருவாக்கப்பட்டுள்ளதாம்வில்லன் கதாபாத்திரம் பவர் புல்லாக இருக்கும் படங்கள் வணிகரீதியாக வெற்றி பெறக்கூடியது அதனால் அந்த பாத்திரத்தில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகஇயக்குனர்லிங்குசாமி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது நாயகனாக மட்டுமே நடித்து வரும்மாதவன்கமலஹாசன்,
விஜய்சேதுபதி, ஆர்யா ஆகியோருடன் இரட்டை ஹீரோவாக நடித்துள்ளார் ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது இல்லைமாதவனின் திரையுலக பயணத்தில் கமர்ஷியல் அந்தஸ்து கொடுத்து அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படங்களில் ரன் படம் முக்கியமானது அந்தப்படத்தை இயக்கியவர் லிங்குசாமி அதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திலும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார் மாதவன். இன்றைய சினிமாவில் கதாநாயகர்கள் இமேஜை புறந்தள்ளி கதாபாத்திரத்தின் வலிமை அறிந்து வில்லனாகவும் நடிக்க தொடங்கியுள்ளதால்லிங்குசாமியின் நட்புக்காக மட்டுமின்றி கதாபாத்திரத்தின் வலிமை கருதி மாதவன்வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் தயாரிப்பாளர் தரப்பில் லிங்குசாமியின் கனவு நிறைவேறுமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here