எந்த தொழில் தொடங்கினாலும்” “லாபம்” என்கிற வாசகம் கணக்கு நோட்டில் அல்லது அலுவலக சுவற்றில் எழுதப்படுவது தவிர்க்க முடியாக நிகழ்வாக தமிழகத்தில் உள்ளது
இந்த வாரத்தில் நாளை செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள ‘லாபம்’, நாளை மறுநாள் செப்டம்பர் 10ம் தேதி கங்கனா ரனவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள ‘தலைவி’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன.
இப்படங்களுக்கான முன்பதிவு கடந்த இரு நாட்களாக ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் மாலை காட்சிகளுக்கு சுமாராகவும், இரவு நேரக் காட்சிகளுக்கு மிகச் சுமாராகவும், பகல் நேரக் கட்சிகளுக்கு மிக மிகச் சுமாராகவும் முன்பதிவு நடைபெற்றிருந்தது