விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கோடம்பாக்கத்தில், இளையராஜாவின் இசைக் கூடத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
நாங்கள் நாடகங்களில் நடித்தபோது என்னை இளையராஜா வசனம் பேசவே விடமாட்டான். என்னை எவ்வளவு வாரிவிட வேண்டுமோ, அவ்வளவு வாரி விடுவான். ரொமான்டிக் தெரிந்தவன்தான். நல்ல இயக்குநர். எந்த வரியை யார் எழுதினாலும், இளையராஜா இசை அமைத்தால் அதற்கு உயிர் கிடைக்கும். நான் பாடல் பாடினாலே இளையராஜா எழுந்து ஓடிடுவான். எனக்கு எப்போதும் வயது 21ஐ தாண்டாது. அதனால்தான் இப்படி ரொமாண்டிக்காக நிற்கிறேன் என்று பேசினார்.
இதுவரை 1700 பாடல்கள் எழுதியுள்ளேன். இந்தியாவிலேயே இசைப் புலமையுடன், இலக்கிய, இலக்கணப் புலமையும் உள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். வெளியில் இருந்து பார்க்க எப்படி தெரிந்தாலும், நெருங்கிப் பழகினால் குழந்தை போன்றவர் இளையராஜாஎன்றார்