Related Posts
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் வடிவேலுவின் நகைச்சுவை முகத்தை மாற்றிக் காட்டியது. அதன் பிறகு அப்படியான ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் வடிவேலுவின் நடிப்பை எதிர்பார்க்கும் திரைப்படம் ‘மாரீசன்’. இந்தப் படத்தின் போஸ்டர்கள் அதை உறுதி செய்கின்றன. ஃபஹத் ஃபாசிலும் – வடிவேலும் இணையும் இந்தப் படத்தை ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தின் 98வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஃபஹத் ஃபாசில் பைக் ஓட்டிக் கொண்டிருக்க அவருக்கு பின்னால் வடிவேலு அமர்ந்திருக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.