அடிமை அரசியல் பேசும் தங்கலான்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில்  விக்ரம் நடித்து வரும்  படத்திற்கு ‘தங்கலான்’ என்கிற பெயர்வைக்கப்பட்டுள்ளது. கோலார் தங்கவயல் உண்மையான வரலாற்றை மையமாக வைத்து  3டி தொழில்நுட்பத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கபோவதாக பா.ரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார் சாதி சார்ந்த, அரசியல் சார்ந்து திரைக்கதை அமைத்து படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிற பா.ரஞ்சித்தின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தை கடந்து பொது தளங்களிலும் விவாத பொருளாக இருந்து வந்தது 

“தங்களது குருதிச் சேற்றில் மாபெரும் தங்க வயலை கட்டியெழுப்பி வரலாற்றில் உரமாகிப்போன மக்களின் ரத்த சரித்திரம் மீண்டும் நண்பர் பா.இரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தின் அறிமுக காணொளியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் என தங்கலான் தலைப்பை அறிவிக்கும் அறிமுக வீடியோவை பகிர்ந்திருக்கிறார் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் தமிழ் பிரபு “அவர் கூறியிருப்பதை உறுதிப்படுத்துகிறது  நேற்று மாலை வெளியான54 நொடிகள் மட்டும் ஓடக் கூடிய படத்தின் பெயரை அறிவிக்கும் வீடியோஅந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஃபிரேமும் மிரட்டும் தொனியில் உள்ளது.இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் புரடெக்க்ஷன்ஸ் படத் தயாரிப்புநிறுவனங்கள்இணைந்து தயாரிக்கிறது.ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன்நடிக்கிறார் என்கிற அறிவிப்பும் டீசரில் அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது. அத்துடன்மலையாள நடிகை பார்வதியும் நடித்துள்ள பிரம்மிக்கவைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதுசார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து அசத்திய பசுபதிதங்கலான் படத்தில் நாமம் போட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலாடை அணியாமல் வேட்டியை வெறும் கோவணம் போல ஏத்தி கட்டிக் கொண்டு கையில் ஆயுதத்தை ஏந்தி  விக்ரம் டீசரில் இடம்பெற்றதை பார்க்கின்ற போது கோலார் தங்க வயல் அடிமைகள் பற்றிய கதையாக இருக்ககூடும் என்பதை யூகிக்க முடிகிறது ஆனால் விக்ரம் ரசிகர்கள் கருத்துவேறு மாதிரியாக உள்ளதுஅப்படியே மருதநாயகம் கமல் மாதிரி இருக்காரு விக்ரம் என்கின்றனர் அதே வேளைவிக்ரம் தோற்றத்தை பார்க்கிறபோது பாலா இயக்கத்தில் அதர்வா நடித்து வெளியான பரதேசி படத்தின் சாயலும் இருப்பதாக கூறப்படுகிறது