இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தில் நடனம் நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானால் அந்த திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு சென்று நடிகர் கூல் சுரேஷ் பாராட்டுவதும், ஏடாகூடமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது இவரது வழக்கம் அதே போன்று நேற்று காலை காட்சி பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியில் படம் பற்றிய கருத்துக்களை கேட்க காத்திருந்த வலைத்தள செய்தியாளர்களிடம் பேசிய கூல் ஜெயந்த் இயக்குநர்ஷங்கர் மகளை பார்க்க தான் விருமன் படம் பார்த்த வந்தேன். மாமனார் சங்கர் சார் அதிதியை காதலிக்கிறேன்.
நீங்க பெரிய இடம். நான் ஏழை. திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷனர் அலுவலகம் செல்வேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார் ஒரு திரைப்படத்தை பார்த்து விட்டு அந்தப் படத்தின் கதை, கலைஞர்களின் நடிப்பை பற்றி கருத்து கூறுவது தான் நல்ல கலைஞனுக்கு அழகு அதை விட்டுவிட்டு காமெடியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பிறர் சங்கடப்படும் வகையில் பேசுவது கூல் ஜெயந்துக்கு வழக்கமாகிவிட்டது என அதிதிஷங்கருக்கு உருவாகியுள்ள ரசிகர்கள் கூல் ஜெயந்தின் இந்த கருத்தை விமர்சித்து வருகின்றனர்