விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி.இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடிக்கிறது.
Related Posts
மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், அயலி மதன், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.பெயரிடப்படாத இப்படத்தை “கனா புரொடக்சன்ஸ்” மூலம் தயாரிக்கிறார் டிராஃபிக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி. “மனிதர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பு. ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவதே இக்கதையின் சிறப்பம்சம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி