அனிருத்தால் தாமதமாகும் கவின் கதாநாயகனாக நடிக்கும் படம்

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவு: ஹரீஷ்

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். இரு படங்களும் முடிவடையுமுன்பே ஆகஸ்ட் 20 ஆம் தேதி அவருக்குத் திருமணம் நடந்தது. அதன்பின் ஆகஸ்ட் 27 அன்று திருமணவரவேற்பு நடந்தது.
அதனால் இப்படங்களின் படப்பிடிப்புகளில் இடைவெளி ஏற்பட்டது.இந்நிலையில், இப்போது கிஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.தீபாவளி வரையில் படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இப்படம் தொடங்கியதிலிருந்தே இடைவெளி விடாமல் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள். ஆனால், இசையமைப்பாளர் அனிருத் கைவசம் வரிசையாகப் பல படங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப்படத்துக்குப் பாடல்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.அதனால் இப்படத்தின் படப்பிடிப்பை இடைவெளி விட்டுவிட்டு நடத்தலாம் எனத் திட்டமிட்டனர். அதன்படி இப்படத்துக்கு இடையே ஸ்டார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் கவின்.

இப்போது மீண்டும் கிஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிடும் உத்வேகத்துடன் இருக்கிறது படக்குழு. அனிருத் சொன்னபடி செய்துகொடுத்தால் கவினின் அடுத்த வெளியீடாக இந்தப்படம்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.