லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்ஷனுக்கும், படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இன்னும் 20% மீதமுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார். விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றார்.
Next Post