அரசியல் பேசும் “அடங்கதே” ஜூன் மாதம் வெளியாகிறது.

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
‘அடங்காதே’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும்  சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
‘அடங்காதே’ குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி,
 “இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் நடித்துள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில்  அண்ணன் சீமான் நடித்துள்ளார்.
திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவித்தார்.