ஆஸ்கர்,ஆசிய திரைப்பட விருது போட்டியில் தென்னிந்திய படங்கள்

ஆஸ்கர் அகடமியின் 95வது விருது அறிவிப்பு, வழங்கும் நிகழ்வு நாளை அதிகாலை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலகலமாக நடைபெற உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானஆர் ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது அதனையொட்டி ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் மரகதமணி ஆகியோருடன் படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

அதே போன்று கடந்த வருடம் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் – 1 படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 500 கோடி ரூபாய் கடந்து சாதனை நிகழ்த்தியது.
மார்ச் 12 ஆம் தேதி ( நாளை )ஹாங்காங்கில் மார்ச் 12 அன்றுநடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான போட்டியில்  “பொன்னியின் செல்வன் -பாகம் 1” 1. சிறந்த திரைப்படம்2.  சிறந்த இசையமைப்பாளர்3. தயாரிப்பு வடிவமைப்பாளர்4.சிறந்த எடிட்டிங் 5.சிறந்த ஒளிப்பதிவு 6.சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்கான விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
நாளை நடைபெறவுள்ள விழாவில் லைக்கா புரொடக்‌ஷன்ஸின் சார்பாக லைகா தலைமை நிர்வாகிஜி்.கே.எம்.தமிழ் குமரன்மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில்நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த்ஆகியோருடன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் புறப்பட்டு சென்றுள்ளனர்
பொன்னியின் செல்வன் – 1, ஆர்ஆர்ஆர் ஆகிய இரண்டு தென்னிந்திய மொழிப்படங்கள் சர்வதேச அளவிலான திரைப்பட விருதுகளுக்கான போட்டியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது