இந்து பெயரில் இருந்து முஸ்லிம் பெயருக்கு மாறிய இயக்குநர் முத்தையா

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் வணிகரீதியாக எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக வசூலையும் பெற்றுள்ளது இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விருமன் படத்தை தொடர்ந்து நடிகர்ஆர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா.

இந்த படத்தைஅருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.

இயக்குநர்முத்தையா இதுவரை இயக்கிய குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்கள் எல்லாமே குறிப்பிட்ட

ஒரு ஜாதியை பின்புலமாக கொண்டு திரைக்கதை மற்றும் படத்தின் பெயரை அமைத்திருப்பார் அதனாலேயே ஜாதிப்படங்கள் இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் முத்தையா பெயரும் இடம்பிடித்தது விருமன் படத்தில் நேரடியாக ஜாதி என்பது குறிப்பிடப்பட்டிருக்காது இருந்த போதும் கடந்த படங்களின் சாயல் விருமன் படத்தில் இருப்பதாக படம் பார்த்தவர்களும் விமர்சகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்இந்நிலையில் அவற்றிலிருந்து வெளிவந்து ஆர்யா நடிக்கும் படத்துக்கு காதர் என்று பெயர் வைத்திருக்கிறாராம். இந்தப்படத்தில் இருக்கும் இன்னொரு முக்கியவேடத்தில் நடிக்க மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது