விஜய் விஷ்வா சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்க, ரஜித் கண்ணா இயக்கத்தில் மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகவிருக்கிறது ‘சாரா’ திரைப்படம்.
ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா.. அல்லது தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த நண்பனையா? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இதன் கதைக் களம்.
கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும்” என்றார்.
கதாநாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, ‘‘கார்த்திக் ராஜாவின் இசையில் நான் நடிக்கப் போவதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன். சாக்ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.
கதாநாயகி சாக்ஷி பேசும்போது, ‘‘இந்தப் படத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி. கார்த்திக் ராஜா சார், இளையராஜா சார் மற்றும் வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘இந்த விழாவை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன்..” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, ‘‘இந்தப் படம் மூலமாக விஜய் விஷ்வா ஒரு நல்ல திரைப்படம் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கும் படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பு – விஸ்வா டிரீம் வேர்ல்டு’ ஆர்.விஜயலஷ்மி, செல்லம்மாள், குருசாமி.ஜி., எழுத்து, இயக்கம் – ரஜித் கண்ணா, இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – ஜெ.லக்ஷ்மன், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமத், கலை இயக்கம் – சுரேஷ் கல்லெரி, சண்டை பயிற்சி இயக்கம் – ‘மிரட்டல்’ செல்வா, பாடல்கள் – சினேகன், அருண் பாரதி, தயாரிப்பு மேலாளர் – சுந்தரம் சிவம், புகைப்படம் – சுரேஷ், ஆடை வடிவமைப்பு – ராஜன், ஒப்பனை – கரி சுல்தான், பத்திரிக்கை தொடர்பு – ஏ.ராஜா.