முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) தன் மீதான அவப்பெயரை களையும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அக்கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யுசிங்) உடன் கூட்டு சேர்கிறார்.
முதல்வரின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறது. இப்படியான சூழலில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்), பத்திரிகையாளர் கோவர்தனின் (இந்திரஜித்) முயற்சியால் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.
குஜராத் கலவர பின்னணியில் இருந்து படம் தொடங்குகிறது கலவரத்தில் ஆதவற்று நிற்கும் சையது மசூத் என தொடங்கி
மோகன்லாலுக்கு முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில்நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார். பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்ப்ட செய்துள்ளனர்.