ககன மார்கன் முதல் பாடல் வெளியானது

ஹிட்லர்’ படத்தையடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘ககன மார்கன்’. இந்த படத்தை அட்டக்கத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

தீப்சிகா, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‘ககன மார்கன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் அக்காவின் மகன்.

இந்த நிலையில், ககன மார்கன் படத்தின் முதல் பாடலான ‘சொல்லிடும்மா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி இசையில் அவரே பாடி வெளியாகியுள்ள இந்தப் பாடலை லாவர்தன் எழுதியுள்ளார்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் வகையில் Energetic மற்றும் vibe ஆன பாடலாக அமைந்துள்ளது.
வசீகரிக்கும் பாடல் வரிகளைக் கொண்டு “சொல்லிடுமா” பாடல் இசையமைக்கப் பட்டிருக்கிறது.இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரபல எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கிய ககன மார்கன், ஒரு கொலை மர்மம்  சார்ந்த திரில்லர் வகையான படமாகும். தலைமைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்விஜய் ஆண்டனியுடன், அறிமுக நாயகன் அஜய் திஷான் வில்லனாக நடிக்கிறார்.
 ஒளிப்பதிவாளர் S யுவாவின் மிக நுட்பமான ஒளிப்பதிவும், கலை இயக்குனர் A ராஜாவின் எதார்த்தமான கலைப்படைப்பும், அதோடு கூடுதலாக விஜய் ஆண்டனியின் இசை மற்றும் அழுத்தமான கதை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து பார்வையாளர்களுக்கு ஒரு “Edge of the Thriller”சினிமா விருந்தாக அமையும் என கூறுகிறது படக்குழு.’ககன மார்கன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.