நடிகர் வடிவேலு நாயகனாக நடித்த முதல் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். வழக்கமான மசாலா சினிமாக்களை இயக்காமல், காமடி படங்கள் மூலம் அரசியல் பகடி செய்யும் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம்” போட்”
ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் யோகி பாபு எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், சின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வெளியாவதையொட்டி இயக்குநர் சிம்புதேவன், படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நான் இதுவரை எடுத்த படங்களை போலவே இந்த படமும் வித்தியாசமான படமாக எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. சொன்ன மாதிரியே எடுத்துக் கொடுங்கள் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை கொடுத்தார்என்றவர்பொதுவாக வரலாற்றில் நமது விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை டெல்லி ,மும்பை நகரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, சென்னைக்கு கொடுக்கப்படுவதில்லை.
இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கில படங்களிலும் இந்தியர்கள் காட்டப்படமாட்டார்கள். ஆனால், இரண்டாம் உலகப் போரில் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர் என தகவல் உள்ளது’ என்றவர் ”
நான் இதுவரை எட்டு படங்கள் இயக்கியுள்ளேன். கால தாமதம் ஏற்படுவதற்கு சூழல் தான் காரணம்” என்றார்.
படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது ஏன் என கேட்கப்பட்ட போது
இப்படத்திற்கு நாங்கள் முதலில் வைத்த பெயர் ”பக்கிங்காம் வீரனும் பரதேசியின் பேரனும்”.. ஆனால், மார்க்கெட்டிங் தேவை எனும் வரும்போது ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது” என கூறினார்
இரண்டாம் உலகப்போர் நடக்கும் 1942 ஆம் ஆண்டு காலகட்டத்தில் யுத்த பாதிப்பில் இருந்து தப்பிக்க படகு ஒன்றில் 10 நபர்கள்கடலுக்குள் பயணிக்கும் ஒரு படகில் பல்வேறு விதமான , முரணான மனிதர்கள், இருந்தால் என்னவாகும் என்பதே திரைக்கதை என்கிறது இயக்குநர் தரப்பில்
பயணிக்கும் போது ஏற்படும் கருத்து மோதல்களை திரைப்படமாக்கியிருக்கிறார் சிம்புதேவன். தான் இயக்கியகாமடி, காமிக்ஸ் படங்களில் அரசியல்வாதிகளை அசால்ட்டாக பகடி செய்யும் வசனங்களை எழுதுகிற சிம்புதேவன்” போட்” படத்திலும் அதனை செய்திருக்கிறார் என்கின்றனர் இயக்குநர் வட்டாரத்தில்
இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைக்க மாதேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.