இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய திரைக்கதை அமைப்பில்’டீன்ஸ்’ படத்தை இயக்கி வருவதாக அறிவித்திருந்தார்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்துதயாரிக்கிறது.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் சம்பந்தமான கதாபாத்திரங்களை தினமும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதல் கதாபாத்திரத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, கிருத்திகா ஐயர், சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்த்திபன் அறிவித்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள 13 கதாபாத்திரங்களை 13 நாட்கள் தொடர்ந்த அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.