கௌதம் வாசுதேவ் இயக்கத்தில்சூர்யா நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் வாரணம் ஆயிரம் இந்தப் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி பாடல் பிரபலமானது அந்த பாடல்வரிகளை தலைப்பாக கொண்டுஇயக்குநர் வெற்றிமாறனின் ‘க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி (Grass Root Film Company)’ தயாரிப்பில் ஆர் கைசர் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ளத் திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’. நடிகை பாடகர் என வலம் வரும் ஆண்ட்ரியா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ளனர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில், பாடலாசிரியர் உமா தேவி வரிகளில் ஆண்ட்ரியா பாடியுள்ள ‘எது நான் இங்கே…’ என்னும் பெண்களை மையப்படுத்திய பாடலை தி.மு.க துணை செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர்கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றுவெளியிட்டுள்ளார்.இது பற்றி பதிவிட்டுள்ள அவர், “பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் பாடலாசிரியர் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.இத்திரைப்படம் இந்த மாதம் (நவம்பர்) 18ம் தேதி ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது
Sign in