விக்ரம் பார்த்து வியந்த மகேஷ்பாபு

0
79
கமல்ஹாசன்,  பகத் பாசில், விஜய்சேதுபதி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் சூன் 3 அன்று வெளியாகிவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் திரையரங்குகளில் 4 வாரங்களைக் கடந்த நிலையில் குறைவான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது வார இறுதி நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகிவிடுகிறது விக்ரம் தியேட்டர் டிக்கட் விற்பனை வாயிலாக சுமார் 500 கோடி ரூபாய் வசூலை விக்ரம் எட்டிப் பிடிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தப்படம் வெளியான பின்பு தமிழில் வெளியான முக்கிய படங்களான வீட்ல விசேசம், மாமனிதன், மாயோன், பட்டாம்பூச்சி, யானை ஆகிய படங்கள் மக்களை ஈர்த்து வெற்றிபெறவில்லை இதன் காரணமாக திரையரங்குகளில் படம் பார்க்க விரும்புகின்றவர்களின் முதல் தேர்வாக விக்ரம் படம் உள்ளது இந்த நிலையில்விக்ரம் படத்தை பார்த்த, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டு மழை பொழிந்துள்ளார். ஒட்டுமொத்த விக்ரம் படமும் எப்படி எடுக்கப்பட்டது என்பதை, அறிந்து கொள்வதற்காக இயக்குனர் லோகேஷை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாது-

விக்ரம் ஒரு ப்ளாக் பஸ்டர் சினிமா. நவீன காலத்தின் மிகச் சிறந்த படைப்பு. இந்தப் படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டு அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன். விக்ரம் மெய் மறக்கச் செய்யும், உணர்ச்சிப்பூர்வமான படம். சகோதரர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள்.விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் அற்புதமாக நடித்திருந்தார்கள். இதற்கு மேல் சிறப்பாக நடிக்கவே முடியாது என்ற அளவுக்கு அவர்களது உழைப்பு இருந்தது. சிறந்தவொரு பின்னணி இசையை அனிருத் கொடுத்துள்ளார். விக்ரம் பட பாடல்கள் என்னுடைய ப்ளே லிஸ்ட்டில் நீண்ட காலம் இருக்கும்.கடைசியாக லெஜெண்ட் கமல்சாரைப் பற்றி. அவரைப் பற்றி விமர்சனம் எழுத எனக்கு தகுதி கிடையாது. அவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற அடிப்படையில் இது எனக்கு பெருமை மிகுந்த தருணம். கமல்சார் உங்ளுக்கும், உங்களது டீமுக்கும் வாழ்த்துக்கள் சார்.
இவ்வாறு மகேஷ் பாபு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here