கம்யூனிஸ் தலைவராக சமுத்திரகனி நடிக்கும் வீரவணக்கம்

சமுத்திரக்கனி, பரத் இருவரும்முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் வீரவணக்கம்.  பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர  சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.
 பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய  பி. கிருஷ்ண பிள்ளை  அவர்களின்வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த திரைப்படமாக வீர வணக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர்  திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
 சமுத்திரகனி மற்றும் நடிகை சுரபி லட்சுமியையும்  மலையாளத்தில்  நாயகன்,நாயகியாக  அறிமுகமானபடம் தான் வசந்தத்தின்டே கனல் வழிகளில் .
 சமுத்திரக்கனி மீண்டும் பி கிருஷ்ணபிள்ளையாக  வீரவணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பெரும் ஜாதி கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம்.
 இத்திரைப்படத்திற்கு    எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து  பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.