ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் குமாருடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஏப்ரல் 10 ஆம்தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டு படங்களும் ஒரே தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இட்லி கடை படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் தனுஷின் குபேரா திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.