குட் பேட் அக்லி அஜித்துடன் இணையும் யோகி பாபு

ஜனவரி2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜீத் குமார் நடிப்பில் துணிவு  படம் வெளியானது.
அதன் பிறகு அஜீத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் விடாமுயற்சி.லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ளது.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குட்பேட் அக்லி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்,சென்னை ஆகிய இடங்களில் நடந்தது.
செப்டம்பர் மாத இறுதியிலிருந்து ஸ்பெயின் நாட்டில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.அங்கு ஐம்பது நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இதில்  இருபது நாட்கள் மட்டுமே அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.இந்நிலையில், நடிகர் பிரசன்னா குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது….

நான் அஜீத் குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.அவருடன் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன.ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த வாய்ப்புகளை எல்லாம் சில காரணத்திற்காக நான் இழந்துள்ளேன்.தற்போது அந்தக் கனவு பலித்து விட்டது.ஆம்,நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறேன்.என்னுடைய சில காட்சிகள் படமாக்கப்பட்டன.அதற்கு மேல் என்னால் தற்போது இப்படம் குறித்த தகவலைப் பகிர முடியாது.நாம் அனைவரும் நினைப்பது போல் அஜீத்குமார் மிகவும் இயல்பான,பணிவான குணத்தைக் கொண்டவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று நடிகர் பிரசன்னா பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,குட் பேட் அக்லி படத்தில் நடிகர் யோகிபாபுவும் இணைகிறார்.அக்டோபர் 11 முதல் சில நாட்கள் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

பிரசன்னா போல் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்பு இப்படத்தில் நடிப்பதாகச் சொல்லலாம் அல்லது படக்குழுவே அறிவிக்கட்டும் என்று அமைதியாக இருக்கலாம்.ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஸ்பெயின் புறப்படுவது மட்டும் உறுதி என்று சொல்கிறார்கள்.