அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான வந்த இடம் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு கமர்ஷியல் படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக இயக்கி உள்ள இந்திப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதுதவிர பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
Related Posts
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.