சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் ராயன்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ள ராயன் படத்தை100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் நடித்து இயக்கி, தயாரித்து தனுஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Posts
இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில்தான் இப்படத்தின் தலைப்புபோஸ்டர் வெளியானது.
குபேரா படத்தில் தனுஷின் தோற்றம் புதிதாகஇருப்பதால் கண்டிப்பாக இப்படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்துபடப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.