இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட மூவரும் இணைந்து ‘போய்வா நண்பா’வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பாடலின் க்ளிம்ப்ஸ், ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட வைத்ததுடன், தனுஷின் வழக்கமான முத்திரை பதிக்கக்கூடிய நடன அசைவுகள் மற்றும் பாடலின் வேகமாக பரவக்கூடிய தன்மையயும் கொண்டு வந்தது. முழுப்பாடலின் வெளியீடு உற்சாகத்தை அதிகரித்துள்ளதுடன், பல்வேறு இசைத் தளங்களில் பிரபலமடைந்து இசைவிரும்பிகள் மற்றும் திரைப்பட ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட ‘குபேரா’ ஒரு பிரம்மிக்க வைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஏஷியன் சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
‘குபேரா’ ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.