குறைக்கப்பட்டசந்திரமுகி 2 சாதிக்குமா?

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில்ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்க்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம்

சந்திரமுகி 2. முந்தைய சந்திரமுகி படத்தை போன்றேஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.
இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் செப்டம்பர் 28 அன்று
இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில், இப்படத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம்.
சந்திரமுகி 2இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் திரையில்ஓடுகிற மாதிரி இறுதி செய்யப்பட்டிருந்ததாம்.படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் நீளத்தைக் குறைத்தால் இன்னும் வேகமாக இருக்கும் என்று  கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குனருக்கு அதில் உடன்பாடில்லை என்றபோதும் பாரத்த அனைவருமே ஒருமித்து இவ்வாறு சொன்னதால் படத்தின் நீளத்தைக் குறைக்கச் சம்மதம் சொல்லிபடத்தின் நீளத்தை இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது படம் இரண்டு மணி முப்பது நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சந்திரமுகி வெளியாகி எத்தனை வருடங்கள் ஆனது என்பதை குறிக்கும் வகையில் பதினேழுவருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ…’ என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘பேய் பங்களா’ செட் அப் தொடர்ந்து வரும் ‘வேட்டையன்’ கதாபாத்திரம் அறிமுகம், சண்டைக் காட்சி, திகிலுக்கான முயற்சி என ஏற்கனவே தமிழ் சினிமாவில்பார்த்துப் பழகிய காட்சிகளாகவே உள்ளன. இடையில் வரும் வடிவேடி காமெடி காட்சிகள் பார்வையாளனை சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப்போகிறது எனினும், புதிதாக தோன்றும் வகையில், கங்கனா ரனாவத் எட்டி உதைப்பது, அவருக்கும் ராகவா லாரன்ஸுக்கும் சண்டை நடப்பது போன்ற காட்சிகளுடன் ட்ரெய்லர் முடிகிறது.  வழக்கமான காட்சிகளைத் தாண்டி படம் பார்வையாளனை நெளியவிடாமல்சுவாரஸ்யமான திரைக்கதையால் ஈர்க்குமா என்பது செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் சந்திரமுகி 2 வெளியாகும் போது தெரிந்துவிடும்.