வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது.அதன்பின் ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.இராணுவவீரர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக எப்போதும் விறைப்புடனே இருக்கிறார் ஆர்யா.நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி. சில காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார்.ஆர்யாவின் குழுவில் ஹரிஷ் உத்தமன், கோகுல்,பரத்ராஜ் ஆகிய ஆண்களோடுபெண்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் காவ்யாஷெட்டி ஆகியோர் இருக்கிறார்கள்.முக்கிய வேடமொன்றில் சிம்ரன் நடித்திருக்கிறார். மாளவிகா, ஆதித்யா மேனன் ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள்.யுவாவின் ஒளிப்பதிவில்காட்சிகளில் தெளிவு.டி.இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.வனப்பகுதி என்றாலே பிற உயிரினங்கள் அல்லது கனிமவளங்கள் ஆகியன வந்துவிடும். சக்தி செளந்தர்ராஜனின் இந்தக்கதையில் இவை இரண்டும் கலந்து வருகின்றன.விநோத உயிரினம் என்று சொல்லிவிட்டு காட்சிக்குக் காட்சி வெவ்வேறு விதமான உயிரினத்தைக் காட்டுகிறார்கள். அவற்றின் இராணி என்று ஆக்டோபஸ் போல் ஒன்றைக் காட்டுகிறார்கள். தொடக்கத்தில் விநோத உயிரினங்களை வில்லனாகச் சித்தரித்துவிட்டு பின்பு அவை உயிர்வாழப் போராடுகின்றன அவற்றின் உயிருக்குக் கேடுவிளைவிப்பது ஒரு தொழிற்சாலை என்று சொல்லிக் கதையை முடித்திருக்கிறார் இயக்குநர்.ஆளில்லாக் கடையில் யாருக்கு டீ ஆத்துற என்பது போல் வில்லனே இல்லாத கதையில் இராணுவவீரர்கள் தடுமாறி நிற்கிறார்கள்.இவற்றால் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது.TAGS: Aiswarya Laxmi arya Captain D.Imman Sakthi Soundarrajan