வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படம் 2025 பொங்கல் நாளையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு,
இந்தப் படத்துக்கு முன்பாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் வெளியானது. வணிக ரீதியாகஅப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அப்படத்தின் இன்னொரு பாகமாக இந்தியன் 3 தயாராகியிருக்கிறது.அந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.
மூன்றாம் பாகத்துக்காக ஒரு பாடல் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.அப்பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிடலாம் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் கருத்து.அதை அவர் ஏற்க மறுக்கிறாராம்.பாடலைச் சேர்த்தால்தான் படம் நன்றாக இருக்கும் என்றுஷங்கர் சொல்கிறாராம்.
இதனால் படத்தைத் தொகுத்துக் காட்டுங்கள்.முக்கியமான சிலர் படம் பார்க்கட்டும்.அவர்கள் எல்லாம் பாடல் சேர்த்தாக வேண்டும் என்று சொன்னால் சேர்த்துவிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு,
இதுமட்டுமின்றி இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமெனில் எனக்குச் சம்பளமாக சுமார் அறுபது கோடி கொடுத்தாக வேண்டும் என்று ஷங்கர் நிபந்தனை விதித்திருக்கிறார்.சம்பளம் கொடுக்கவில்லையெனில் அந்தப் படத்தை முடித்துத் தரமாட்டேன் என்றும் சொல்லிவிட்டாராம்.
இதனால்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுப்பதாக ஷங்கர் ஒப்புக் கொண்டால்தான் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில்வெளியிட அனுமதிப்போம். இல்லையெனில் அப்படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவிடம் கூறப்பட்டுள்ளது.
இதைச் சற்றும் எதிர்பாராத இயக்குநர் ஷங்கர், இது தொடர்பாக தமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்களிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.