கோழிப்பண்ணை செல்லதுரை படததிற்கு சர்வதேச அங்கீகாரம்

அமெரிக்க நாட்டில் கடந்த22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை. முதன் முறையாக இந்த வருடம் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தான் இயக்கியுள்ள” கோழிப்பண்ணை செல்லத்துரை” திரையிடப்பட உள்ளதாக கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
 ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி  தினேஷ்குமார், ஆகியோர் நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. என். ஆர்.ரகுநந்தன் இசையில் அசோக் குமாரின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத்  படத்தொகுப்பில் விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் ஆக்லெ ண்ட் சர்வதேச திரைப்பட விழாவில்
செப்டம்பர் 18 ஆம்தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது.
22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இது வரை தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக, இரு நாள் முன்பாக அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து  தெரிவித்தார்.