சமநீதி பேச வரும் அநீதி – வசந்தபாலன்

அதனால்தான் இந்தப் படத்துக்கு அநீதி என டைட்டில் வைத்தேன். மனிதன் பேராசை கொண்டவன். மிருகம் போன்றவன். பக்கத்தில் இருப்பவனின் செல்போனும் வேண்டும், வீடும் வேண்டும். பணம் வேண்டும் என அலைபாயும் குரங்கு. அறத்தின் பக்கம் நின்று சகமனிதனை ஏற்றுகொள்ள சொல்வதே அநீதி. நான் இங்க சொல்ல விரும்புவது, ‘சாப்டியா.. உனக்கு எதாவது கஷ்டம் இருக்கா? இருந்தா சொல்லுங்க’ போன்ற இந்த வார்த்தைகளைத் தான் எதிர்பார்க்கிறேன். இந்த சிறு அன்பைத்தான் மொத்த உலகமும் மற்றவரிடம் எதிர்பார்க்கிறது.நான் ஐசியூவில் மூச்சுத் திணறி படுத்திருந்தேன். மருத்துவருக்கு தெரியவில்லை. என் நண்பர் வரதராஜனுக்கு தெரிந்தது. ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்து அவர் டாக்டராக மாறி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்து பின் உணர்ந்தார். அவர் அப்படி பார்க்காமல் இருந்திருந்தால் நினைவஞ்சலி போஸ்டருடன் இந்த வாழ்க்கை முடிந்திருக்கும். இந்த வாழ்க்கையே பெரும் ஆசீர்வாதம் என நினைக்கிறேன். இயக்குநர் ஷங்கர் எனக்கு ‘வெயில்’ படத்தை கொடுத்தார்.இப்போது படத்தை இயக்கி தயாரித்திருக்கிறேன் என்றேன். சரி நான் வெளியிடுகிறேன் என்றார். ஜி.வி.பிரகாஷ் ‘நான் இருக்கேன் சார்’ என்றார். இந்த ‘நான் இருக்கேன் சார்’ என்ற குரல் என்னைச் சுற்றி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இவ்வளவு அன்புக்கு நான் தகுதியானவரா என யோசித்துகொண்டே இருக்கிறேன்.அர்ஜூன் தாஸிடம் நிர்வாணமாக ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்றேன். உடனே அவர், ‘பண்ணிடலாம்’ என யோசிக்காமல் ஒப்புக்கொண்டார். சிறந்த நடிகர் அவர். இந்தப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுகொடுக்கும். ‘மதயானை அரசாளும் காட்டில் தனக்கான இடம் தேடும் ஈசல்” என்ற கார்த்திக் நேதாவின் வரியைப்போல அந்த ஈசல் தான் அநீதி” என்றார்அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.