கார்த்தி நடிப்பில்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.
கடந்த 10 ஆம் தேதி அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.