இப்படத்துக்கு ‘பராசக்தி’ எனத் தலைப்பிட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதன் அறிமுக டீசரை படக்குழு தணிக்கை செய்திருக்கிறது. அதில் ‘பராசக்தி’ என்ற பெயருடன் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ‘பராசக்தி’ தான் படத்தின் தலைப்பு என்பது உறுதியாகி இருக்கிறது.
ஏற்கனவே ’பராசக்தி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, ‘மீண்டும் பராசக்தி’ என்ற பெயரில் அந்தத் திரைப்படம் வெளியானது. தற்போது மீண்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ’பராசக்தி’ என்று பெயர் சூட்டியிருப்பது லட்சோசோப லட்சம் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வேண்டுமென்றே தமிழ்த் திரையுலக வரலாற்றை சிதைக்க முற்படும் இந்த போக்கிற்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.