சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் இணையும்- ‘ஒன் டு ஒன்’ ட்ரெய்லர் எப்படி?

சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ள ‘ஒன் டு ஒன்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று  வெளியிடப்பட்டுள்ளது.
திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் நடித்துள்ள  ‘ஒன் டு ஒன்’ படத்திலவிஜய் வர்மன், நீத்துசந்திரா, ராகினி திவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். 24HRS PRODUCTIONS நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?:

“முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது. தோல்வியே கிடைச்சாலும் முயற்சி செய்யாம விடமாட்டன்” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. சுந்தர்.சி – அனுராக் காஷ்யப் மோதல் சுவாரஸ்யத்தை கூட்டும் என தெரிகிறது. அனுராக் காஷ்யப்புக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார். சஸ்பென்ஸூடன் நகரும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.