மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது,
நலன் குமரசாமியிடம் பேசும்போது, ஒரு கட்டத்தில் ‘சூது கவ்வும் 2’ கதையை எழுத முடியவில்லை என்றும் சில ஆண்டுகள் கழித்து இதை உருவாக்கலாம் என்றும் சொன்னார். அவர் பிசியானதால் 2-ம் பாகத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொன்னார். இதன் திரைக்கதையை யாரால் எழுத முடியும் என்று நினைத்தபோது, அர்ஜுன் வந்தார். பிறகு ஒரு குழுவை உருவாக்கி எழுதினோம். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி எப்படிப் பொருத்தமாக இருந்தாரோ, இதில் மிர்ச்சி சிவா பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்து நடிக்க வைத்தோம். இயக்குநர் அர்ஜுன் இதன் திரைக்கதைக்காக 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். என் நிறுவனத்திலிருந்து வெளியாகும் 21-வது படம் இது என்றார்.