சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ல் வெளியாகிறது

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன், 2D எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு ரெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.
சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள
‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜீத்குமார் பிறந்தநாளான 2025 மே 1 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த தேதியை ‘ரெட்ரோ’ படக்குழு தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.