சூர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கும் தில்ராஜு ‘அடடே சுந்தரா’

  • சூர்யா இப்போது பாலா இயக்கி வரும் படத்திலும், வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல்
நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிக்கவுள்ள படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை ஆனால்
 சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ஒன்று ஸ்டுடியோ கிரீன் பேனரில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது
சிறுத்தை சிவா சூர்யா இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் இப்படத்தைத் தயாரிப்பது  தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு என்றும் கூறப்படுகிறது படத்தின் முதல் பிரதியின் உரிமையை வாங்குவது போன்றுஸ்டுடியோ கீரின் நிறுவனத்திடமிருந்து அப்படியே இப்படத்தை தில்ராஜு வாங்கியிருப்பதாக  சொல்லப்படுகிறது.தில்ராஜு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம் தயாரிப்பில் இருக்கும்போது விஜய் நடிக்கும் 66 ஆவது படத்தை தயாரிக்க போவதாக அறிவிக்கப்பட்டது அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
ஷங்கர், விஜய், சூர்யா என முக்கியமான மூன்று தமிழ் சினிமா கலைஞர்கள் பணிபுரியும் திரைப்படங்களை தில்ராஜ் தயாரித்து வருகிறார் படத்தின் முதல் பிரதி தயாரானவுடன் அப்படத்தின் ஏரியா உரிமைகள் வியாபாரம் செய்யப்படும். கால்ஷீட் வாங்கப்பட்டு படப்பிடிப்புக்கு திட்டமிடப்பட்ட படத்தை கூடுதல் தொகை கொடுத்து வாங்கி தயாரிப்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
.