படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் வில்லன் வேடத்தில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி நடித்துள்ளார்.
கதாநாயகனாக ‘ஆதாம்’ வேடத்தில் நடித்திருக்கும் யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார்.
‘ஐமா’ என்றால் ‘கடவுள் சக்தி’ என்றும் பொருளாம். திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.
நாயகன் – நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு, அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது.
யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சிகள் நகரும்போது, திடீரென்று வில்லன் என்ட்ரி, அடியாட்கள் என்ட்ரி எல்லாம் அந்த சஸ்பென்சை நீர்த்துப் போகச் செய்கிறது.
இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். காட்சிகளில் இன்னும்கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.