‘ஜவான்’ வெற்றி விழாவை புறக்கணித்த நயன்தாரா நடனமாடிய தீபிகா படுகோன்

ஜவான்’ வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ‘ஜவானி’ன் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டனர்  இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினார்கள்.

ஜவான்வெற்றியை கொண்டாடும்விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘ஜவான்’ படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக் குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 15.09.2023 அன்றுமாலை 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்த விழாவில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படத்திற்கு பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின்போது நேரலையில் இசையமைத்தார். கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய ராஜகுமாரியும் இதில் பங்கு கொண்டார்.

இந்த நிகழ்வில் ‘சாலேயா’ பாடலுக்கு SRK மற்றும் தீபிகா படுகோனே இருவரும் நடனமாடினார்கள் . மேலும், நாயகன் ஷாரூக்கான் ‘ராமையா வஸ்தாவய்யா’ பாடலுக்கும் நடனமாடி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

இந்த ‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ஒன்பது நாட்களில் 735 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்து ஓடிக்கொண்டுள்ளது.

தான் தயாரிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளுக்கு செல்லும் நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன், பட விழாக்களுக்கு செல்வதில்லை அதே போன்று ஜவான் வெற்றி விழா நிகழ்ச்சியையும் நயன்தாரா புறக்கணித்துள்ளார்.