கன்னட நடிகர் சிவராஜ்குமார் ‘ஜாவா’ படத்தின் மூலம் தமிழில் நாயகனாகஅறிமுகமாக உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர், தனுஷ் நடித்து வெளியான கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ்சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட வருக்குதமிழ்நாட்டில் அவருக்கான ரசிகர் வட்டாரம் உருவானது. இந்த நிலையில்சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த ‘ஈட்டி’ மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஐங்கரன்’ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.படம் குறித்து இயக்குனர் ரவி அரசு கூறுகையில், சிவராஜ்குமார் ரசிகர்களை இந்த படம் 100 சதவீதம் திருப்திப்படுத்தும். செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் ‘ஜாவா’ என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை படமாக்க உள்ளோம். நடிகர் சிவராஜ்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார், என்றார்.