16 குட்டிச் சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய்.16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின் எனச் சொல்வார்கள்.
மலேசியாவிலிருந்து சென்னை வரும் நாயகன் முகேன்ராவ், வரும்போதே ஒரு ஜின்னையும் வாங்கி வருகிறார்.அதுவந்த நேரம் தனக்கு நன்மைகள் நடக்கின்றன என்று நாயகன் நம்புகிறார்.ஆனால் தங்களுக்குக் கெடுதல்கள் நடப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் காதல் மனைவி பவ்யா தாரிகா,அந்த ஜின் பெட்ட்கத்தின் அடியிலேயே சுயநினைவிழந்து கிடக்கிறார்.மருத்துவமனை சென்றால் அவர் கோமாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நாயகி பவ்யாதாரிகாவுக்கு திரைக்கதையில் முக்கிய பங்கு.அதற்கேற்ற நடிப்பும் அவருடைய இயல்பான அழகும் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன.ரசிக்க வைத்திருக்கிறார்.
பாலசரவணனின் நகைச்சுவைகள்,நிழல்கள் ரவி, வடிவுக்கரசி,இமான் அண்ணாச்சி,வினோதினி,ரித்விக் ஆகியோரின் பாத்திரப்படைப்புகள், வில்லனாக வரும் ராதாரவி உள்ளிட்டோர் படத்துக்குப் பலம்.
அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவில் காட்சிகளில் இனிமை.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம்.
படத்தொகுப்பாளர் தீபக், சண்டைப்பயிற்சி இயக்குநர் பிரதீப் தினேஷ் ஆகியோரின் உழைப்பும் நன்று.
வீட்டில் நாய் வளர்க்கலாம் பேய் வளர்க்கலாமா? என்கிற ஒற்றைக் கேள்வியை எல்லோருக்குள்ளும் எழ வைக்கும் கதையை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டி.ஆர்.பாலா.